மகனுக்கு ‘தல அஜித்’ என்று பெயர் வைத்துள்ள மதுரை ரசிகர்!

 

மகனுக்கு ‘தல அஜித்’ என்று பெயர் வைத்துள்ள மதுரை ரசிகர்!

நடிகர்களின் ரசிகர்கள்  கொண்டாட்டம் அவர்களின் வீடுகளின் வாசலோடு நின்று விடும். ஆனால்  அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இது விதி விலக்கு. 

நடிகர் அஜித்தின் ரசிகர் ஒருவர் தனது மகனுக்கு தல அஜித் என்று பெயரிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக பெரிய நடிகர்களின் பிறந்தநாள் வரும்போது அவரது ரசிகர்கள் அதை ஒரு பண்டிகை போலவே கொண்டாடுவார்கள். ஊரெங்கும் தோரணம் கட்டி, மெகா சைஸ் ரேடியோ வைத்து, அந்த நடிகர் நடித்த படங்களின் பாடல்களை ஒலிக்க செய்து, நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடுவது வழக்கம்.

ajith

 ஆனால் ‘தல’யின் ரசிகர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் அவரின் வாரிசான மகள் பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடி தெறிக்க விடுவார்கள். பெரும்பாலான நடிகர்களின் ரசிகர்கள்  கொண்டாட்டம் அவர்களின் வீடுகளின் வாசலோடு நின்று விடும். ஆனால்  அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இது விதி விலக்கு. 

ajith

இந்நிலையில் மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் தனது மகனுக்கு தல அஜித் என்று பெயர் வைத்துள்ளார்.  தல அஜித்தின் பிரபு சான்றிதழ் மற்றும் பள்ளி அடையாள அட்டை ஆகியவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.