மகனுக்கு இசையமைக்க கற்று கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான்: வைரல் வீடியோ!

 

மகனுக்கு இசையமைக்க கற்று கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான்: வைரல் வீடியோ!

ஏ.ஆர். ரஹ்மான் பிகில்  படத்தில் சிங்க பெண்ணே என்ற பாடலை  பாடியுள்ளார்

ஏ.ஆர். ரஹ்மான் தன் மகன் அமீனுடன் இணைந்து இசையமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

arr

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பிகில்  திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. விஜய் – அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் பிகில்  படத்தில் சிங்க பெண்ணே என்ற பாடலை  பாடியுள்ளார்.  மேலும்  விஜய் ‘வெறித்தனம்’  பாடலை  பாடி  அசத்தியுள்ளார். ஒருபுறம் படங்களுக்கு இசையமைப்பது, வெளிநாடு கச்சேரி என படுபிஸியாக  வலம்  வரும் ரஹ்மான் தனது மகனுக்கு இசை பயிற்சி தருவதிலும் முனைப்பு காட்டி வருகிறார்.  

 

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தன் மகன் அமீனுடன் இணைந்து இசையமைக்கும் வீடியோ ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அடர்ந்த இருட்டில் இருவரும் உட்கார்ந்து வித்தியாசமான மேற்கத்திய இசைக்கருவிகளுடன்  இசையமைக்கின்றனர். அப்போது ரஹ்மான் மகனின் கைகளை பிடித்து கொண்டு அவருக்கு பயிற்சி கொடுக்கிறார். இந்த வீடியோவை கண்டா பலரும் ரஹ்மான் மாற்று அவரது மகனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.