மகனுக்காக மினி புல்லட்!  சூப்பர் அப்பாவின் அசாத்திய சாதனை!

 

மகனுக்காக மினி புல்லட்!  சூப்பர் அப்பாவின் அசாத்திய சாதனை!

உடைஞ்ச சைக்கிளை ஒரு மணி நேரத்திற்கு இத்தனை ரூபாய் என்று வாடகை சைக்கிள் கடைகளில், நம் தவணை வருவதற்காக காத்திருந்து சைக்கிள் ஓட்டிய காலங்கள் எல்லாம் மலையேறி விட்டது. நம் ஏக்கங்களையும் நம் சந்ததியினரும் பெறக் கூடாது என்கிற நினைப்பு தான் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இருந்து வருகிறது.

உடைஞ்ச சைக்கிளை ஒரு மணி நேரத்திற்கு இத்தனை ரூபாய் என்று வாடகை சைக்கிள் கடைகளில், நம் தவணை வருவதற்காக காத்திருந்து சைக்கிள் ஓட்டிய காலங்கள் எல்லாம் மலையேறி விட்டது. நம் ஏக்கங்களையும் நம் சந்ததியினரும் பெறக் கூடாது என்கிற நினைப்பு தான் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இருந்து வருகிறது. தரமான பள்ளிக்கூடம், நல்ல விளையாட்டு மைதானம், பள்ளி படிப்பு தவிர, அவர்களுக்கு ஆர்வமான வேறு துறைகளில் ஈடுபாடு என்று அடுத்த தலைமுறையினர் மீது இப்போதுள்ள பெற்றோர்களில் பெரும்பாலானோர் நிஜமான அக்கறையில் இருக்கிறார்கள். இந்நிலையில், டூ வீலர் ஓட்ட வேண்டும் என்கிற தனது கனவு நனவாக வருஷக்கணக்கில் காலதாமதமானதை இப்போதும் நினைத்துப் பார்க்கும் ஒரு தந்தை, தன்னைப் போலவே மகனும் ஆசைப்படுவதை அறிந்து, அவனுக்கு ஒரு மினி புல்லட்டை செய்து பரிசளித்திருக்கிறார்.
கைகளில் எப்போதும் பணம் புரளும் அப்பாக்கள், மகன் ஆசைப்பட்டதை எல்லாம் எளிதில் வாங்கிக் கொடுத்து விடலாம். ஆனால், இவர் , தன்னுடைய மகனுக்காக, தன் வீட்டில் வைத்தே ஒரு மினி புல்லட்டை மகன் ஓட்டும் விதமாக செய்திருக்கிறார். அதுவும், அச்சு அசல் அப்படியே மினி ராய்ல் என்பீல்டு புல்லட்!

mini bullet

டூ வீலர் வண்டி ஓட்டிச் செல்பவர்களின் பெரும்பாலான கனவு, புல்லட் ஓட்டுவதாக தான் இருக்கும். அதுவும் வாலிப வயதில், ராயல் என்பீல்டு புல்லட் ஓட்டிச் செல்வதை பெரும்பாலானோர் பெருமிதமாகவே கருதுவார்கள். இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஒருவர், தன் மகன் புல்லட் ஓட்டுவதற்கு ஆசைப்படுகிறான் என்பதை அறிந்து, அவனது உயரத்திற்கு எட்டுவதைப் போல, அச்சு அசலாக ஃபுல்-சைஸ் ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார் சைக்கிளை போன்றே காட்சியளிக்கும் விதத்தில் கடினமாக உழைத்து ஒரு மினி புல்லட்டை தயாரித்திருக்கிறார். ஒரிஜினல் ராயல் என்பீல்டு புல்லட்டில் இருப்பதைப் போலவே இந்த வண்டியிலும் ஹெட்லேம்ப், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பெட்ரோல் டேங்க்கில் ராயல் என்பீல்டு பெயர், சஸ்பென்ஸன், இன்டிகேட்டர்கள், மிரர்கள், லெக் கார்டு போன்ற வசதிகளும் இருக்கின்றன. 
முற்றிலும் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த புல்லட்டின் அனைத்து பாகங்களும் வீட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக் பேட்டரி மூலம் இயங்க கூடியது. எலெக்ட்ரிக் பைக் என்பதால், சுற்றுச்சூழலையும் இது மாசுபடுத்தாது.