மகனின் பதவிக்காக அமித் ஷாவிடம் சாய்ந்த துரை முருகன்… தமிழை அடமானம் வைத்து அட்வான்ஸ்..!

 

மகனின் பதவிக்காக அமித் ஷாவிடம்  சாய்ந்த துரை முருகன்… தமிழை அடமானம் வைத்து அட்வான்ஸ்..!

அமித் ஷாவிடம் சாய்ந்த துரைமுருகன் என்கிற டைட்டிலுக்கும் இந்த செய்திக்கும் முடிச்சு போட்டு பார்க்க வேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கிறது.

வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றாலும் எம்.பி.,யாக இன்னும் பதவியே ஏற்காத தனது மகன் கதிர் ஆனந்துக்கு  புது பதவி வாங்கி கொடுத்து விட்டார் துரை முருகன். 

வேலுார், மக்களவை தொகுதியில் பணப் பட்டுவாடா சர்ச்சையால் தேர்தலை நிறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இன்னும் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. 

kathir

அதற்குள் தென்னக ரயில்வேயின் சென்னை மண்டலத்துக்கான எம்.பி.,க்கள் குழுத் தலைவர் பதவியை தனது மகன் கதிர் ஆனந்துக்கு துரைமுருகன் பெற்றுக் கொடுத்து விட்டார். இந்த மண்டலத்தில் சென்னை, வேலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் வருகிறது. 

இதில் தி.மு.க.,வின் சீனியர் எம்.பி.,க்களான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் அனைவரும் எம்.பி.,யாக இருக்கிறார்கள்.  அவர்களை எல்லாம் விட்டுட்டு, முடஹ்ல் முறையாக வென்ற, ஜூனியரான தனது மகனுக்கு பதவி வாங்கி கொடுத்ததில் துரைமுருகன் மீது மற்ற எம்.பிகள் கடுப்பில் இருக்கின்றனர். கவனிக்கவும் இப்போது மத்திய ஆட்சியில் இருப்பது பா.ஜ.க. இந்த ஆட்சிக்கு கீழ் வருவது தான் ரயில்வே துறை. அப்படியானால் அந்தப்பதவியை பாஜகவினரை நாடாமல் எப்படி வாங்கிக் கொடுத்திருப்பார் துரைமுருகன்.

 durai murugan

இந்தி எதிர்ப்பை வைத்து அரசியல் செய்து வருகிறது திமுக. இந்நிலையில் அக்கட்சியின் பொருளாளரான துரைமுருகன் சில தினங்களுக்கு முன் இந்தியை கற்றுக் கொள்வது ஒன்றும் தப்பில்லை. பிற மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது தான் எனக் கூறி இருந்தார். அதன் பிறகே நேற்று ’’இந்தியா முழுவதும் ஹிந்தியை ஒரே மொழியாக்க வேண்டும்’’ என அமித் ஷா பேசினார்.  durai murugan

முழங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடாதீங்க என்பதெல்லாம் அரசியலில் எடுபடாது. ஆக மொத்தத்தில் அமித் ஷாவிடம் சாய்ந்த துரைமுருகன் என்கிற டைட்டிலுக்கும் இந்த செய்திக்கும் முடிச்சு போட்டு பார்க்க வேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கிறது.