ப. சிதம்பரம் – வைரமுத்து சந்திப்பு: திருக்குறளால் பேசி கொண்ட சுவாரஸ்யம்!

 

ப. சிதம்பரம் – வைரமுத்து சந்திப்பு: திருக்குறளால் பேசி கொண்ட சுவாரஸ்யம்!

சிதம்பரத்தைக் கண்டதும் நான் கண் கலங்கினேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தைக் கண்டதும் நான் கண் கலங்கினேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் திகார் சிறையில் உள்ளார்.  கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்யப்பட்ட அவருக்கு  அக்டோபர் 17-ம் தேதிவரை   நீதிமன்றக் காவலை நீட்டித்து சி.பி.ஐ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

chithambaram

இந்நிலையில், நேற்று ப.சிதம்பரம்  சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது அவரை கவிஞர் வைரமுத்து சந்தித்துப் பேசினார். அவருடன் சிதம்பரத்தின் மனைவியும் வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் உடனிருந்தார். அப்போது வைரமுத்துவிடம் சிதம்பரம்,  ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்று வள்ளுவரின் வாக்கை  கூற அதற்கு வைரமுத்துவோ, ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை’ என்று திருக்குறள்  மூலமே பதிலளித்தார். 

chithambaram

இதையடுத்து  செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து,  ‘சிதம்பரத்தை கண்டதும் கலங்கிவிட்டேன். அவரும் கண் கலங்கினார். அவரின் உடல் எடை குறைந்துள்ளது. ஆனாலும் மனவலிமை குறையவில்லை. சிதம்பரத்தின் உடல்நிலை கருதி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.