ப.சிதம்பரம் மனைவியால் தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவிகள்..? வெடித்துக்கிளம்பும் விவகார அரசியல்..!

 

ப.சிதம்பரம் மனைவியால் தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவிகள்..? வெடித்துக்கிளம்பும் விவகார அரசியல்..!

நீட் விவகாரத்தில் அதை கொண்டு வர வாதாடியவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி. அவர் வாதாடியதால் தான் நீட் செயல் வடிவத்துக்கு வந்தது.

நீட் மசோதா நிராகரிக்கப்பட்டது முதலில் தமிழக முன்னாள் தலைமை செயலாளரான கிரிஜா வைத்தியநாதனுக்கு தான் தெரியும். அடுத்ததாக எடப்பாடி, ஓ.பி.எஸ், செங்கோட்டையன், கல்வி துறை செயலாளர் என தெரிய வந்திருக்கிறது.  அதனால்தான் நீட்  சிறப்பு வகுப்பு, பாட புத்தகங்கள் மாற்றம், சீருடை மாற்றம், பிளஸ் 1, 2வுக்கு தனித்தனியாக பொதுத் தேர்வு என்று மக்களின் மனதை திட்டமிட்டு திசைதிருப்பிக் கொண்டிருந்தனர்.

 nalini

மக்களவை தேர்தலில் கூட அதிமுக நீட் குறித்து அதிகம்  வாக்குறுதி தராமல் தந்திரமாக பிரசாரம் செய்தது. எனவே, ஆளும் வர்க்கத்தினர் அனைவருக்கும் முன்பே தெரியும். தேர்தல் முடிந்த பிறகு மத்தியில் பாஜக மூர்க்க பலத்தோடு ஆட்சியில் உட்கார்ந்து விட்டதால்  உண்மையை போட்டு உடைத்துவிட்டார்கள். இதில் பாவம் தமிழிசைதான் தன் கட்சியின் உண்மையான நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள முடியாமல் நீட் வரும் என்று உளறித் தள்ளிக் கொண்டிருந்தார்.EPS

இன்று மீண்டும் நீட்டுக்கு எதிராஜ முறையிடப்போவதாக சி.வி.சண்முகம் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். அடுத்து, ஓ.பிஎஸ், நீட்டுக்கு எதிராஜ மீண்டும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எந்த வழக்கறிஞரும் வாதிடாமல் இருக்க வேண்டும் என போட்டுடைத்துள்ளார். ஆம். நீட் விவகாரத்தில் அதை கொண்டு வர வாதாடியவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி. அவர் வாதாடியதால் தான் நீட் செயல் வடிவத்துக்கு வந்தது. nalini

ஆக மொத்தத்தில் நீட் விவகாரத்தில் நீட்டி முழங்கி வருகிறது பாஜக- அதிமுக. ஆகையால் நீட் தமிழகத்தில் நீளும் என்பதே தற்போதைய நிலைப்பாடு.