ப.சிதம்பரம் கைது : சட்டத்திற்கு மேல் யாரும் பெரிதல்ல; ஐபிஎஸ் ரூபா கருத்து!

ப.சிதம்பரம் கைது : சட்டத்திற்கு மேல் யாரும் பெரிதல்ல; ஐபிஎஸ் ரூபா கருத்து!

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்  கைதாகியுள்ளது குறித்து  ஐபிஎஸ் அதிகாரி ரூபா கருத்து தெரிவித்துள்ளார். 

ப.சிதம்பரம் கைது : சட்டத்திற்கு மேல் யாரும் பெரிதல்ல; ஐபிஎஸ் ரூபா கருத்து!

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்  கைதாகியுள்ளது குறித்து  ஐபிஎஸ் அதிகாரி ரூபா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்  நேற்று இரவு  கைது செய்யப்பட்டார். அவரது வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சிபிஐ அதிகாரிகள், இல்லத்திற்குள் சுவர் ஏறி குதித்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி ரூபா தன்னுடைய டிவிட்டர்  பதிவில், ‘சட்டத்திற்கு மேல் யாரும் பெரிதில்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபணம் ஆகியுள்ளது ‘ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து  அவரது மற்றொரு பதிவில், ‘என்னுடைய கருத்துக்கு வேறு அர்த்தங்களைச் சேர்க்க நினைக்கின்றனர்.  ஒரு காவல்துறை அதிகாரியாகவும், குடிமகளாகவும் அனைத்து குற்றவாளிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. இதுவும் ஒரு முன்மாதிரி நிகழ்வு.  குற்றவியல் சட்ட அமைப்பு எல்லோருக்கும் சமமானதாக இருக்கும்  போது, நான் இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருப்பேன்’ என்றார். 

ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் இந்த கருத்துக்கு எதிராகவும், நேர்மறையாகவும் பலரும் கருத்து  தெரிவித்து வருகின்றனர்.