ப.சிதம்பரம் கைது எதிரொலி: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

ப.சிதம்பரம் கைது எதிரொலி: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

திரு ப.சிதம்பரத்தைக் கைது செய்திருப்பதன் மூலம் நரேந்திரமோடி, அமித்ஷா வின் பழிவாங்கும் படலம் வெளிப்பட்டிருக்கிறது.

ப.சிதம்பரம் கைது எதிரொலி: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்  நேற்று இரவு  கைது செய்யப்பட்டார். அவரது வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சிபிஐ அதிகாரிகள், இல்லத்திற்குள் சுவர் ஏறி குதித்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் தொண்டர்கள் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் இது மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் படலம் என்று குற்றச்சாட்டினர். 

இந்நிலையில், சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வதற்கு நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்து 9 முறை நிதிநிலை சமர்ப்பித்த திரு ப.சிதம்பரத்தைக் கைது செய்திருப்பதன் மூலம் நரேந்திரமோடி, அமித்ஷா வின் பழிவாங்கும் படலம் வெளிப்பட்டிருக்கிறது. சர்வாதிகார நடவடிக்கைகள் மூலமாக சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பதன் மூலம், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. மத்திய பாஜக அரசு, தனது கைப்பாவையாக மத்திய புலனாய்வுத் துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு சிதம்பரத்தைக் கைதுசெய்திருப்பதைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இன்று  காலை 10 மணிக்கு  கண்டன ஆர்ப்பாட்டமானது சென்னை, சத்தியமூர்த்தி பவனிலிருந்து ஊர்வலமாகச் சென்று சென்னை அண்ணா சாலையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.