ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்

 

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் சுமார் ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் சுமார் ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. தன் தந்தை ப.சிதம்பரத்தின் பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் சுமார் ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். மேலும் லண்டனில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டையும் அவர்கள் முடக்கியுள்ளனர்.

அதேபோல்,  ப.சிதம்பரம் வங்கி கணக்கில் வைக்கப்பட்டிருந்த இருப்புத் தொகையான ரூ.90 லட்சம் ரொக்கமும், டெல்லியில் உள்ள அவரது வீடும் முடக்கப்பட்டுள்ளது.