ப.சிதம்பரம் அதிரடி கைது… பலித்தது பாகிஸ்தான் சொன்ன பின்னணி பாட்ஷா..!

 

ப.சிதம்பரம் அதிரடி கைது… பலித்தது பாகிஸ்தான் சொன்ன பின்னணி பாட்ஷா..!

ஏதோவொரு மக்கள் பிரச்சினைக்காக சட்டையில் ரத்தம் தோய்ந்து காவல் துறை வேனில் ஏறி கையாட்டுகிற அரசியலுக்கு நேரெதிரானவர்.

ப.சிதம்பரம் அதிரடி கைது… பலித்தது பாகிஸ்தான் சொன்ன பின்னணி பாட்ஷா..!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி பரபரப்பும், சுவாரஷ்யமும் மிஸ் ஆகாமல் நடக்கும் இந்த ப.சிதம்பரம் பற்றியும், இந்த வழக்கு சம்பந்தமாகவும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் பரவுகின்றன. அதில் ப.சிதம்பரம் யார்? அவருக்காக எதிர்க்கட்சிகள் எந்த அளவிற்கு மும்முரமாக கண்டனம் தெரிவித்தது போன்ற பல தகவல்களோடு ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்; விவகாரத்தைப் பொறுத்தவரை இது அரசியல் பகடையாட்டம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதே சமயம் இது ஒருநாள் பரபரப்புக் கூத்தாகவே முடியும். உடனடியாக அவரைக் கைது செய்து சிறையில் செக்கிழுக்க வைத்து வ.உ.சி மாதிரி திரும்பி வருவார் என்பது போன்ற கற்பனைகளெல்லாம் மிகையானவையே.

இந்த விவகாரத்தில் இப்போது காங்கிரஸ், சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளை பா.ஜ.க அரசு மோசமாகக் கட்டுப்படுத்துவதாகச் சொல்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்களோ, அதை இப்போது இந்த அரசு செய்கிறது. முன்பொருமுறை தந்தி டி.வி.யில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் முஷரப் ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், “எங்களுடைய அரசாங்கமும் நீதி மற்றும் உளவு அமைப்புகளைக் கட்டுப்படுத்துகின்றன. நீங்களும் அதைச் செய்கிறீர்கள்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆக எல்லா அரசும் தங்களது தேவைக்கேற்ப நீதி வழங்கும் அமைப்புகளைக் கட்டுப்படுத்துகின்றன. சசிகலா விவகாரத்தையே எடுத்துக் கொள்ளலாம். அவர் தலைவியாய் எழுந்து சிறை செல்கிற வரை நடந்த நாடகத்தில் நீதிமன்றங்களும் ஒரு பாத்திரமாக இருந்தனதானே? இதுமாதிரி இந்தியா முழுக்க கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பலநூறு உதாரணங்களை எடுத்துக் காட்டி விட முடியும். நீதி, தண்டனை என்பதெல்லாம் சாமானியன் விஷயத்தில் மட்டுமே சாட்டையைச் சுழற்றும். அதிகாரமிக்கவர்கள் விஷயத்தில் அந்தந்த காலச் சூழலைப் பொறுத்தது.

இந்த விவகாரத்தில் திமுக பழைய கசப்புகளை மறந்து கௌரவமாகவே நடந்து கொண்டிருக்கிறது. “இது பழிவாங்கும் நடவடிக்கை. அவர் சட்ட வல்லுனர் என்பதால் இதைச் சட்டப்படி சந்திப்பார்” என திமுக தலைவர் ஒற்றை வரியில் முடித்து விட்டார். இந்த விவகாரத்தில் இன்னொரு கோணமும் இருக்கிறது.

நாட்டின் உயரிய அமைச்சராக இருந்த ஒருத்தருக்கு எதிரான இந்நடவடிக்கையில், காங்கிரஸ் தொண்டர்கள் தரப்பில் கனத்த மௌனமே நிலவுகிறது. ஏனெனில் ப.சி என்றைக்குமே தொண்டர்களின் தலைவராக இருந்ததில்லை. “அய்யா எங்க ஊர் குளத்தில” என பிரச்சினையை ஆரம்பிக்கும் முன்னரே, “அதுக்கு நான் என்ன பண்ணனும்ங்கற” என அன்பாகப் பேசித் துரத்தி விடுவதை நானே நேரில் பலதடவை பார்த்திருக்கிறேன். அவர் புள்ளிவிபரங்களால் பின்னப்பட்ட மேல்தட்டு அரசியல்வாதியாகவே எல்லா நேரங்களிலும் வெளிப்பட்டிருக்கிறார்.

ஏதோவொரு மக்கள் பிரச்சினைக்காக சட்டையில் ரத்தம் தோய்ந்து காவல் துறை வேனில் ஏறி கையாட்டுகிற அரசியலுக்கு நேரெதிரானவர். அந்த அடிப்படையில் இந்த விவகாரத்தை அவர் தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில் தொண்டர்களின் தார்மீக பலம் என்றெல்லாம் அவரேகூட எதிர்பார்க்க மாட்டார். தொண்டர்களின் தார்மீகம் என்று சொல்லி யாராவது வந்து நின்றால்கூட நெற்றியைச் சுருக்கி நம்பாமல் வழக்கமான சிரிப்பையே உதிர்ப்பார் என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.