ப.சிதம்பரத்தை வேட்டையாடுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்!

 

ப.சிதம்பரத்தை வேட்டையாடுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்!

சிதம்பரத்தை வேட்டையாடுவது வெட்கக்கேடு எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரத்தை வேட்டையாடுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்!

புதுடெல்லி:  சிதம்பரத்தை வேட்டையாடுவது வெட்கக்கேடு எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது, மேலும் இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திற்கும் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகின்றது. 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கடந்த ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த  டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி  தாக்கல் செய்த மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. இதனால் அவர் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கு முன்பாகவே ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முனைப்பு காட்டி வருகிறது. 

 

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது  டிவிட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசின் தோல்விகள் குறித்து எதற்கும் பயப்படாமல்  பேசி வருகிறார் ப.சிதம்பரம். சிதம்பரத்தை வேட்டையாடுவது வெட்கக்கேடு. எந்த சூழலிலும் சிதம்பரத்திற்கு ஆதரவாகக் காங்கிரஸ் துணைநிற்கும். நாட்டிற்கு விசுவாசத்துடன் சேவையாற்றிவர் ப.சிதம்பரத்தை  ஆதரிப்பதால் என்ன விளைவுகள் வந்தாலும் சந்திக்கத் தயார்’ என்று பதிவிட்டுள்ளார்.