ப.சிதம்பரத்தை அடுத்து தட்டித்தூக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்… பங்கம் செய்யும் பாஜக அரசு..!

ப.சிதம்பரத்தை அடுத்து தட்டித்தூக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்… பங்கம் செய்யும் பாஜக அரசு..!

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடு,  நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனை டெல்லியில் உள்ள அவரது வீட்டிலும் நடத்தப்பட்டது. அங்கு ரூ8.59 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

dk sivakumar

இதனையடுத்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு நேரில் ஆஜராகும்படி டி.கே.சிவகுமாருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் இதை எதிர்த்து டி.கே.சிவகுமார் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனு நேற்று தள்ளுபடி ஆனதால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அவர் நேரில் ஆஜாராகி விளக்கம் அளித்தார். நான்கு நாள் விசாரணைக்கு பின் அமலாக்கத்துறை டி.கே.சிவகுமாரை கைது செய்ததுள்ளது.

dk sivakumar

இவர், காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது எம்எல்ஏக்களை தக்க வைக்க முயன்றவர் டி.கே.சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.