“ப்ளீஸ் மோடிஜி…எங்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள்!” – சொகுசு கப்பலில் இருந்து இந்தியர்கள் கோரிக்கை

 

“ப்ளீஸ் மோடிஜி…எங்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள்!” – சொகுசு கப்பலில் இருந்து இந்தியர்கள் கோரிக்கை

ஜப்பான் கடலில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருந்து தங்களை பாதுகாப்பாக அழைத்து செல்லுமாறு அக்கப்பலில் உள்ள இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டோக்கியோ: ஜப்பான் கடலில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருந்து தங்களை பாதுகாப்பாக அழைத்து செல்லுமாறு அக்கப்பலில் உள்ள இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹாங்காங்கில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் என்ற பிரிட்டிஷ் சொகுசு கப்பல் ஜப்பான் துறைமுகத்துக்கு சென்றது. அந்த கப்பலில் 3711 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக சொகுசு கப்பல் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் கப்பலுக்கு சென்று பயணிகளை சோதனை செய்தனர். இதுவரை அந்தக் கப்பலில் உள்ள 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கப்பலில் 160 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கப்பலில் இருந்து வெளியேற முடியாததால் அதிலுள்ள பயணிகள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ttn

இந்த நிலையில், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இந்தியர்களில் சிலர் பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை தங்கள் யாருக்கும் பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும், எப்படியாவது தங்களை காப்பாற்றுமாறும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் தங்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய தொற்று நோய்களைத் தடுக்க அந்தக் கப்பலில் உள்ள பயணிகள் தங்கள் அறைகளுக்குள்ளேயே தங்குமாறு கப்பல் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.