ப்ளீஸ் சாக்ஷி-கவினை மட்டும் காட்டாதிங்க’: உச்சக்கட்ட கடுப்பில் ரசிகர்கள்

 

ப்ளீஸ் சாக்ஷி-கவினை மட்டும் காட்டாதிங்க’: உச்சக்கட்ட கடுப்பில் ரசிகர்கள்

சென்னை:  பிக் பாஸ் சீசன் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3யில் வனிதா வெளியேறிய பிறகு கண்டெண்ட் இல்லாமல் தவிர்த்து வரும் விஜய் தொலைக்காட்சி தற்போது கவின்- சாக்ஷியை குறிவைத்துள்ளது. ஆம்… கடந்த வாரம் முழுக்க கவின், லாஸ்லியா, சாக்ஷியின் முக்கோண காதல் கதையே ஒளிபரப்பானது. 

Kavin

தற்போது அது மீண்டும் இந்த வாரத்திலும் தொடர்ந்துள்ளது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், சாக்ஷி கருப்பு நிற உடையணிந்து வருகிறார். அதை பார்த்து மிகவும் அழகாக இருக்கிறாய் என  ரேஷ்மா கூற அருகிலிருந்த கவினும் ப்ளாக் ஷர்ட் ஒன்றை ட்ரை செய்துக் கொண்டிருந்தார். அதை கண்ட ரேஷ்மா, ‘நீங்களும் பிளாக் ஆஹ்’ என கேட்க அது கவினுக்கு புரியவில்லை.  உடனே அனைவரும் சாக்ஷி பிளாக் கலர் அணிந்திருந்ததால் நீங்களும் அதே காலரா என கூறி கவினை கிண்டலடித்து  அனைவரும் சிரித்தனர். 

இதை கண்ட பார்வையாளர்கள், ‘ப்ளீஸ் சாக்ஷி-கவினை மட்டுமே இனிமே காட்டாதிங்க. அந்த வீட்டில் வேற யாருமே உங்க கண்ணுக்கு தெரியலையா’ என்று உச்சக்கட்ட கோபத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.