ப்ளாக் கேப்ஸ்க்கு டி20 தொடரில் வெள்ளையடித்த இந்திய அணி!

 

ப்ளாக் கேப்ஸ்க்கு டி20 தொடரில் வெள்ளையடித்த இந்திய அணி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 5-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.

teamindia

முதற்கட்டமாக, இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4 போட்டிகளின் முடிவில் 4-0 என தொடரை கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில், 3வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஒயிட்வாஷ் செய்ய இந்திய அணியும், ஆறுதல் வெற்றி பெற நியூசிலாந்து அணியும் களம் கண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

klrahul

இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை வகித்தார். கேஎல் ராகுல் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் 60 ரன்கள் எடுத்திருந்தபோது, தசை பிடிப்பு காரணமாக ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இறுதியாக, 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

சற்று சிக்கலான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சரிய துவங்கின. 17 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாற்றம் கண்டது.

teamnz

பின்னர் ஜோடி சேர்ந்த சைப்பர்ட் மற்றும் டெய்லர் இருவரும் நன்கு ஆடி வந்தனர். சைப்பர்ட் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்ததும் விக்கெட்டுகள் மளமளவென சரிய துவங்கின. 115/3 என நல்ல நிலையில் நியூசிலாந்து அணி இருந்தது.

பின்னர் 141/9 என மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசி ஓவரில் 21 ரன்கள் நியூசிலாந்து அணிக்கு தேவைப்பட்டது. ஆனால் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 5-0 என இந்திய அணி நியூசிலாந்தை டி20 தொடரில் ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது.

வருகிற 5ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி துவங்க உள்ளது.