ப்ரீ சாப்பாடு வேணும்னு என்னென்ன விஷயம்லாம் பண்ணிருக்கீங்க…ஜொமோட்டோ கேள்விக்கு அசத்தல் பதில்களை கூறிய நெட்டிசன்கள்!

 

ப்ரீ சாப்பாடு வேணும்னு என்னென்ன விஷயம்லாம் பண்ணிருக்கீங்க…ஜொமோட்டோ கேள்விக்கு அசத்தல் பதில்களை கூறிய நெட்டிசன்கள்!

இதில் ஜொமோட்டோ  நிறுவனம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி மூக்கை உடைத்து கொள்ளும்.   

இந்தியா முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் சேவையில் உபர், ஸ்விகி, ஜொமோட்டோ   ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஜொமோட்டோ  நிறுவனம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி மூக்கை உடைத்து கொள்ளும்.   

ttn

இந்நிலையில் ஜொமோட்டோ  நிறுவனம் தங்கள் டிவிட்டர் பக்கத்தில், இலவசமாக உணவு சாப்பிட வேடிக்கையாக நீங்கள் செய்த விஷயம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதை கேட்டதும் நம் மக்கள் மொத்த  விஷயத்தையும் புட்டு புட்டு வைத்து விட்டார்கள்.

ttnttnttn

அதாவது திருமணங்களில் அழைப்பிதழ் இல்லாமல் போய்  சாப்பிடுவேன் என்றும்  எனது நண்பர்களை ட்ரீட் வையுங்கள் என்று கூறுவேன் என்றும் முன்னாள் காதலியின் திருமணத்தில் சாப்பிடுவேன் என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலரோ, அலுவலகத்தில் இரவு 10.30 மணிக்குமேல் இருந்து பணியாற்றுவேன் அப்படி வேலை செய்தால் அங்கு ப்ரீ சாப்பாடு கிடைக்கும் என்றும் கூறி அதிரவைத்துள்ளனர்.  டிவிட்டரில் ஜொமோட்டோ  நிறுவனத்தின் இந்த கேள்வி தற்போது டிரெண்டடித்துள்ளது.