போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 120 ஜிபி டேட்டா…பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சலுகை

 

போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 120 ஜிபி டேட்டா…பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சலுகை

120 ஜிபி டேட்டா அளிக்கும் வகையில் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

டெல்லி: 120 ஜிபி டேட்டா அளிக்கும் வகையில் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

120 ஜிபி டேட்டா அளிக்கும் வகையில் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.798 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ், 120 ஜிபி 2ஜி/3ஜி டேட்டா ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த புதிய தேர்வு செய்யும் வாடிக்கையாளர்ளுக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா மற்றும் மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.

தற்போதைக்கு இந்த ரீசார்ஜ் சலுகை கர்நாடகா வட்டாரத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மற்ற வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த சலுகை ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.