போஸ்கோ வழக்கில் கைதாகி வெளிவந்த ஆசிரியர் தற்கொலை!

போஸ்கோ வழக்கில் கைதாகி வெளிவந்த ஆசிரியர் தற்கொலை!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ம் தேதி நரேந்திர பாபுவிடம் இசை பயிலும் 14 மாணவர்களும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள், நரேந்திர பாபு தங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.இதனையடுத்து போலீசார் நரேந்திர பாபுவைப் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் வைக்கத்தை அடுத்தது ஆறாட்டுங்குளக்கரை.இந்த ஊரைச்சேர்ந்த இசையாசிரியர் நரேந்திர பாபு.51 வயதாகும் நரேந்திரபாபு ஏட்டுமானூரில் இருக்கும் அரசு உறைவிட பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.பள்ளி மாணவர் விடுதி அருகிலேயே தங்கி கற்பித்து வந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ம் தேதி நரேந்திர பாபுவிடம் இசை பயிலும் 14 மாணவர்களும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள், நரேந்திர பாபு தங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.இதனையடுத்து போலீசார் நரேந்திர பாபுவைப் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

45 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு வெளியே வந்த நரேந்திரபாபு நேற்று முன்தினம் தன் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.அவர் தற்கொலை செய்துகொண்ட இடத்தருகே ஒரு விளையாட்டு மைதானம் இருக்கிறது. அதில் இருந்த ஒரு வாலிபால் வலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி,மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நரேந்திர பாபு தனித்தனியே கடிதங்கள் எழுதி கட்டி வைத்து இருந்தார்.

இந்தக் கடிதங்களில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய் என்றும், அதனால் தன் சாவுக்குக் காரணமான பள்ளியின் கண்காணிப்பாளர்,டிரைவர் உட்பட மூவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார். இது குறித்து கோட்டையம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.