போலீஸ் லைசென்ஸ் கேட்டார் ..வாலிபர் குத்து விட்டார் – பொதுஇடத்திலேயே தாக்கப்பட்ட   போக்குவரத்து போலீஸ்… 

 

போலீஸ் லைசென்ஸ் கேட்டார் ..வாலிபர் குத்து விட்டார் – பொதுஇடத்திலேயே தாக்கப்பட்ட   போக்குவரத்து போலீஸ்… 

ஓசூர் மெயின் ரோட்டில் சந்தோஷ் என்ற 25 வயது எலெக்ட்ரிசியன் வியாழனன்று தன்னுடைய பைக்கில் ஒரு வழிப்பாதையில் போனார்.அப்போது  ஜெயராம் என்ற 59 வயது போலீஸ்காரர் அவரை மடக்கி,லைசென்ஸ் கேட்டார்.

ஒருவழி பாதையில் வந்த வாலிபரை மடக்கி லைசென்ஸ் கேட்ட போலீசை மூன்று வாலிபர்கள் சேர்ந்து நடுரோட்டிலேயே கடுமையாக தாக்கிய சம்பவம் போலிஸாரிடையே கோபத்தை உண்டு பண்ணியுள்ளது.

பொம்மனஹள்ளி பகுதியில் ஓசூர் மெயின் ரோட்டில் சந்தோஷ் என்ற 25 வயது எலெக்ட்ரிசியன் வியாழனன்று தன்னுடைய பைக்கில் ஒரு வழிப்பாதையில் போனார்.அப்போது  ஜெயராம் என்ற 59 வயது போலீஸ்காரர் அவரை மடக்கி,லைசென்ஸ் கேட்டார்.அது இல்லாததால் அபராதம் விதித்தார் .அப்போது அவரோடு வாக்குவாதம் செய்த சந்தோஷ் அந்த தெருவிலிருந்த மேலும் இரண்டு வாலிபர்களை சேர்த்து கொண்டு போலீசை பலமாக தாக்கினர்,அவருடைய சீருடையையும் கிழித்தனர் .
இதை பார்த்த பொதுமக்களும்,சில போலீசும் அந்த இடத்திற்கு விரைந்து வந்து ட்ராபிக் போலீசை காப்பாற்றினார்கள்.மேலும் மற்ற போலீஸ்காரர்கள் சேர்ந்து அந்த மூன்று வாலிபர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.பிறகு அவர்கள் மூவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.