போலீஸ் போல நடித்து வழிபறி செய்யும் கும்பல்! வேலூரில் பிடிபட்டனர்!

போலீஸ் போல நடித்து வழிபறி செய்யும் கும்பல்! வேலூரில் பிடிபட்டனர்!

தமிழகம் முழுவதும் சமீப காலங்களாய் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பணமதிப்பிழப்பு, பொருளாதார மந்த நிலை போன்றவைகளும் பெருகி வரும் குற்றச் செயல்களுக்கு காரணங்களாக கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆந்திரா மாநிலம், நெல்லூரை சேர்ந்த நேசக்குமாருக்கு (42) ஆன்லைன் மூலமாக வேலூரைச் சேர்ந்த ஐந்து பேர் அறிமுகமானார்கள். நேசக்குமார் ஆந்திர மாநிலத்தில் துணி வியாபாரம் செய்து வருகிறார். 

police dress

வேலூரில் அறிமுகமான ஐந்து பேரும், நேசக்குமாரிடம், எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல், 50 லட்சம் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை குறைந்த வட்டிக்கு கடனாக பணம் வாங்கித்தர முடியும் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கின்றனர். இவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய நேசக்குமார், அவரது மகள் யாமினியின் மருத்துவ படிப்பிற்காக 50 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுத்தருமாறு அவர்களிடம் கூறியிருக்கிறார்.
இவர்களுக்கு கமிஷன் தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால், 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கித் தருவதாக ஆன்லைனில் நேசக்குமாரிடம் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்துடன் வேலூர் புது பஸ் ஸ்டாண்டுக்கு நேசக்குமார் வந்தார். அங்கு தயாராக நின்றிருந்த ஐந்து பேரும், நேசக்குமாரை காஞ்சிபுரத்திற்கு காரில் அழைத்து சென்றனர். அப்போது வழியில் போலீஸ் உடையில் வந்த மூன்று பேர் காரை மடக்கி, நேசக்குமாரிடம் இருந்த ஐந்து லட்சம் ரூபாய்க்கு கணக்கு கேட்டனர். கையில் இருக்கும் பணத்திற்கான காரணத்தையும், முறையான கணக்கையும் நேசக்குமார் கூறாததால், அந்த பணத்தை எடுத்துக் கொண்டு பின்னர், காவல் நிலையம் வந்து, பணத்திற்கான கணக்கைக் காண்பித்து பணத்தைப் பெற்றுச் செல்லும்படி கூறிவிட்டு அவர்கள் சென்று விட்டனர். பின்னர் பணத்திற்கான கணக்குகளை எடுத்துக் கொண்டு நேசக்குமார் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்குச் சென்ற போது தான், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இது குறித்து புகாரளித்தவுடன், வேலூர் வடக்கு போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். 

car

இந்நிலையில், போலீசாரின் ரோந்து பணியின் போது காரில் வந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் நேசக்குமாரிடம் ஐந்து லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற, வடுகந்தாங்கலை சேர்ந்த சதீஷ்குமார், 32, பூந்தோட்டம் ராஜேஷ்குமார், 25, காந்திநகரை சேர்ந்த சஜத்முகமத், 41, என்பது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், வாக்கி டாக்கி, காவல் துறையினர் அணியும் உடைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.