போலீஸ் தேடிய நிஜ  “பாட்ஷா”-  பெயர் மாற்றம் -மத மாற்றம் செய்து இல்லறத்தில் இருந்த கிரிமினல் 20 ஆண்டுக்கு பிறகு கைது   

 

போலீஸ் தேடிய நிஜ  “பாட்ஷா”-  பெயர் மாற்றம் -மத மாற்றம் செய்து இல்லறத்தில் இருந்த கிரிமினல் 20 ஆண்டுக்கு பிறகு கைது   

 மும்பையில்  சோட்டா ராஜனுடன் தொடர்புடைய, பல கிரிமினல் வழக்குகளோடு , 22ஆண்டுகளுக்கும்  மேலாக தலைமறைவாக இருந்த 45 வயது நபர் மும்பை குற்றப்பிரிவு போலீசால்  புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அமர் பாபுராவ் வாக் என்றழைக்கப்படும்  யாசின் கான் மும்பைக்கு அருகிலுள்ள நாலசோபராவிலில்  கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.1996 ஆம் ஆண்டில் புறநகர் கண்டிவாலியில் சமதநகரில் ஐபிசி பிரிவு 399 இன் கீழ் கைது செய்யப்பட்ட பின்னர் வாக் தற்காலிக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

rajan

சில நாட்களுக்கு முன்பு, அவர் நாலசோபராவில் வசிப்பதாக குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அவர் யாசின் முகமது கான் என்ற பெயரில் இருப்பதாக  காவல்துறையினர் கேள்விப்பட்டு  புதன்கிழமை அவரை கைது செய்தனர்.1988 முதல் 1995 வரை குறைந்தது ஐந்து கொலை மற்றும் பணம் பறித்தல் வழக்குகளில் வாக் சம்பந்தப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார்.

amar

அவர் சோட்டா ராஜன் கும்பலை  சேர்ந்த  காஷிநாத் பாஷி மற்றும் அனில் நந்தோஸ்கர் அல்லது ஆண்டியா ஆகியோருடன் பணியாற்றினார் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். தலைமறைவான பிறகு  அவர் ஒரு முஸ்லீம் பெண்ணை காதலித்து இஸ்லாத்திற்கு மாறி அவரை திருமணம் செய்து கொண்டார் என்று அந்த அதிகாரி கூறினார். அவரிடம் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமமும் இருந்தது.