போலீஸ் தரக்குறைவாக திட்டியதால் கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: அப்டேட் என்ன தெரியுமா?

 

போலீஸ் தரக்குறைவாக திட்டியதால் கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: அப்டேட் என்ன தெரியுமா?

கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ரயில்வே காவல் உதவிஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை: கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ரயில்வே காவல் உதவிஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்தார். கடந்த 25ம் தேதி காலை சுமார் 8 மணியளவில் டிஎல்எப் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரைத் தனது காரில் ஏற்றிச் சென்றார்.மற்றொரு ஊழியரை காரில் ஏற்ற வேண்டியிருந்ததால், அண்ணாநகர் பாடி மேம்பாலம் அருகே ராஜேஷ் காரை நிறுத்தினார். அப்போது அங்கே வந்த போலீசார், இவரை தகாத வார்த்தைகளால் பேசி, காரை அங்கேயிருந்து நகர்த்துமாறு திட்டியுள்ளனர். காரையும் பின்னால் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

suicide

பெண்மணி முன்பாக மிக கேவலமான வார்த்தைகளால் தன்னை போலீசார் திட்டியதால் மனமுடைந்த ராஜேஷ், செல்போனில், தற்கொலை செய்யப்போவதாக விடியோ எடுத்துவிட்டுத்தான் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

suicide

இந்தநிலையில், ரயில்வே கண்காணிப்பாளர் ரோகித் நாதன், ராஜேஷ் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக முறையாக விசாரணை செய்யவில்லை என்று தாம்பரம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ராமுத்தாயை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார். ராஜேஷின் தற்கொலை காரணமான போக்குவரத்து காவலர்கள் யார் யார் என்பது குறித்து விசாரிக்க, மேற்கு சென்னை காவல்துறை இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெறுகிறது. ராஜேஷை போக்குவரத்து காவலர் திட்டும் உடன் பயணித்த ஐ.டி பெண் ஊழியரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.