போலீஸ் டி.ஐ.ஜி.யால் பாலியல் பாதிப்பு-செக்ஸ் டார்ச்சரால் “Suicide” செய்யப்போவதாக சிறுமி மாயம்…

போலீஸ் டி.ஐ.ஜி.யால் பாலியல் பாதிப்பு-செக்ஸ் டார்ச்சரால் “Suicide” செய்யப்போவதாக சிறுமி மாயம்…

“என் பெண் திங்களன்று கல்லூரிக்குச் சென்றாள். யாரோ அவளை அங்கே சந்தித்து அவளுடைய செல்போன் எண்ணை வாங்கி சென்றார்கள்  என்று சொன்னாள். அன்று அவள் கல்லூரியில் இருந்து திரும்பி வந்ததும், அவள் நேரடியாக தூங்கச் சென்றாள், மறுநாள் காலையிலிருந்து அவள் காணாமல் போயிருந்தாள்” என்று சிறுமியின் தந்தை கூறினார்.

மும்பையில் ஒரு சிறுமி திங்கள்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 17 வயது சிறுமியை, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி) நிஷிகாந்த் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக முன்பு குற்றம் சாட்டியிருந்தார். சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், அவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனதாக  கூறினர்.

தனது மகள் ஒரு தற்கொலைக் கடிதத்தை  விட்டுச் சென்றதாக அவர் கூறினார், “அதில் அவர் டி.ஐ.ஜி.யால்  செக்ஸ் டார்ச்சர்  இருப்பதாகவும்,அதனால்  இறக்க விரும்புவதாக எழுதியுள்ளதாக  கூறினார்.”

“இரவு 11:30 மணியளவில் சிறுமி  வீட்டை விட்டு வெளியேறும் காட்சி  சிசிடிவி கேமராவில்  சிக்கியதாக போ லிசார் தெரிவித்தனர். காவல்துறை அக்கறை காட்டினால் , அவர்கள் எந்த நேரத்திலும் என் மகளை கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவர்கள் கண்டறிய விரும்பவில்லை  எனவும் அவர்கள் டி.ஐ.ஜி மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை ஏனெனில் அவர் ஒரு உயர் மட்ட அதிகாரி, “என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த விஷயத்தை முதல்வருக்கு தெரிவிக்கவேண்டும்   என்றும் அவர் வலியுறுத்தினார்.

“எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. எவரும் எங்களை தாக்கலாம் . எங்கள் குடும்பத்தின்  எதிர்காலம் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். நாளை என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது,” என்று அவர் மேலும் கூறினார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள டி.ஐ.ஜி மோர் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது கடந்த மாதம் டிசம்பர் 26 ஆம் தேதி  வழக்கு பதிவு செய்யப்பட்டது. மைனர் சிறுமியின் பிறந்தநாள் விழாவில் பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படுகிறது.