போலீஸ்காரரையே போட்டுத்தள்ள துணிந்த மணல் கடத்தல் கும்பல்! கடமையை செய்தவருக்கு வந்த கஷ்டம்

போலீஸ்காரரையே போட்டுத்தள்ள துணிந்த மணல் கடத்தல் கும்பல்! கடமையை செய்தவருக்கு வந்த கஷ்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் பாலக்கோடு காவல் எல்லையின் கீழ் உள்ள ஒருபகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அஜய் மற்றும் செந்தில் என்ற இருவர் டிராக்டரில் மணல் கடத்தி வந்துள்ளனர். இதையறிந்த உதவி ஆய்வாளர் தங்கவேல் அந்த டிராக்டரை காவல் நிலையம் எடுத்துச் செல்லுமாறு அவர்களிடம் கூறியுள்ளார்.

sand-theft-case

ஆனால், அஜய், செந்தில் இருவரும் டிராக்டரை காவல் நிலையம் எடுத்துச் செல்லாமல் வண்டியை வேகமாக நகர்த்தியுள்ளனர். அருகே இருந்த உதவி ஆய்வாளர் தங்கவேல் மற்றும் அவரது இரு சக்கர வாகனத்தின் மீது ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் தங்கவேலுக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. அவரது வாகனத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட சில வழக்குகளில் அவர்கள் மீது உதவி ஆய்வாளர் தங்கவேல் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் அஜய், செந்தில், நாகமுத்து மற்றும் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.