போலீஸுக்கு தெரிந்தே சட்டவிரோதமாக விற்கப்படும் மதுபாட்டில்கள்..கடைகளில் கல்லா கட்டும் விற்பனை!

 

போலீஸுக்கு தெரிந்தே சட்டவிரோதமாக விற்கப்படும் மதுபாட்டில்கள்..கடைகளில் கல்லா கட்டும் விற்பனை!

தேர்தல் நடைபெறும் இடங்களில் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்க அனைத்து மதுபான கடைகளும் கடந்த புதன்கிழமை முதல் அடைக்கப்பட்டது.

 தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வாக்களிப்பதற்காக அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ttn

அதுமட்டுமில்லாமல், தேர்தல் நடைபெறும் இடங்களில் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்க அனைத்து மதுபான கடைகளும் கடந்த புதன்கிழமை முதல் அடைக்கப்பட்டது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறது. 

ttn

ஈரோட்டில் உள்ள வடக்குப்பேட்டை, வாரச்சந்தை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறைக்குத் தெரிந்தே மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், சத்தியமங்கலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் என்ற பேரில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. அங்கு அனைத்து உயர் ரக மதுபாட்டில்கள் 24 மணி நேரத்திற்கும் விற்கப்பட்டு வருவது மட்டுமின்றி, அனைத்து மதுபாட்டில்களும் ரூ.50 அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் போது அங்குக் கூட்டம் அதிகரித்து,  கல்லா கட்டுகிறது.

ttn

சட்ட விரோதமாகச் செயல்படும் இந்த கடையை மூட  வேண்டும் என்றும் காவல்துறையினரே இதற்கு உடந்தையாக இருப்பது வேதனை அளிப்பதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.