போலீசுக்கு தண்ணிகாட்டி வந்த கிரிமினல்: திருமண ஆசைகாட்டிச் சிக்கவைத்த பெண் சப் இன்ஸ்பெக்டர்!

 

போலீசுக்கு தண்ணிகாட்டி வந்த கிரிமினல்:  திருமண ஆசைகாட்டிச் சிக்கவைத்த பெண் சப் இன்ஸ்பெக்டர்!

அவர் திருமணத்திற்குப் பெண் தேடுகிறார் என்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்தது. 

உத்தரபிரதேச மாநிலம் மஹோப்பா மாவட்டத்தில் உள்ள பிஜோரி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்கிஷன் சவுபே. இவர் மீது கொலை, கொள்ளை என ஏராளமான வழக்குகள்  நிலுவையில் இருக்க, அவர் போலீசிடம் சிக்காமல் தண்ணிகாட்டி வந்தார். இதனால் பால்கிஷனை  எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று எண்ணிய போலீசார், அவரை பற்றி துப்பு கொடுத்தால் 10 ஆயிரம் சன்மானம் என்று அறிவித்தது. இதன் பிறகு பால்கிஷன் செல்போன் எண்ணும்  அவர் திருமணத்திற்குப் பெண் தேடுகிறார் என்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்தது. 

ttn

இதையடுத்து அவருக்கு போன்செய்தால் ஆப் மூலம் டிராக் செய்து கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்த போலீசார் அவனை ஏமாற்றும்படி, பெண் ஊழியர் ஒருவர் பெயரில் ஒரு சிம் கார்டை வாங்கினர். பிறகு அந்த நம்பர் மூலம் பெண்  சப் இன்ஸ்பெக்டர் பேசினார். பிறகு அவரே ஸாரி, ராங் நம்பர் என்று வைத்துவிட  சந்தேகமடைந்த பால்கிஷன் சவுபே ட்ரூகாலரில்   அந்த எண்ணை செக் செய்ய, அது பெண் ஊழியர் பெயரிலிருந்தது. இதனால் அவருக்கு சந்தேகம்  தீர்ந்தது. 

பிறகு சில நாட்கள் கழித்து அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் அதே நம்பருக்கு போன் செய்தார். இப்படியே இவர்களுக்குள் நட்பு ஏற்பட ஒருகட்டத்தில் அந்த பெண் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூற  பால்கிஷன் அதற்கு சம்மதம் சொல்லி நேரில் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். 

crime

அதற்கு அந்த சப் இன்ஸ்பெக்டரோ நல்ல காரியம் பேச போகிறோம். எனவே பிஜோரி கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வருமாறு கூற,  வருங்கால மனைவியை  பார்க்க போகிறோம் என்ற ஆசையில் ஜோராக கிளம்பி கோயிலுக்கு வந்தார் பால்கிஷன் . ஆனால்  பெண் சப் இன்ஸ்பெக்டர் அங்கு வரவில்லை. மாறாக 10 முதல் 15 போலீசார் மஃப்டியில் வந்திருந்தனர். அப்போது பால்கிஷன் அந்த பெண்ணுக்கு போன் செய்யமுற்பட்ட போது , இந்த நம்பருக்குத்தான போன் பண்றீங்க என்று கேட்டு  போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். வித்தியாசமான முறையில் ரவுடியை மடக்கி பிடித்த   போலீசாரை இதனால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.