போலீசாரின் லத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க பயன்பட்டிருக்க வேண்டும் – பிரியங்கா ஆவேசம்

 

போலீசாரின் லத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க பயன்பட்டிருக்க வேண்டும் – பிரியங்கா ஆவேசம்

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த 14ம் தேதியன்று பசுக்களுக்கு புல் வெட்டுவதற்காக 19 வயது தலித் பெண் ஒருவர் தனது அம்மாவுடன் வயலுக்கு சென்றார். திடீரென காணாமல் போன அந்த பெண்ணை தாய் தேடிய போது சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆடையில்லாமல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, நாக்கு வெட்டப்பட்டு மற்றும் முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்த தனது மகளை அந்த தாய் ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஜவஹர்கலால் நேரு மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் நிலை மோசமடைந்ததால் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று அந்த பெண் மரணம் அடைந்தார். பெண்ணின் சடலத்தை பெற்றோரின் அனுமதியின்றி காவல்துறையினரே அவசர அவசரமாக எரித்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோ ஹத்ராஸ்க்கு நடந்தே சென்றனர். அவர்களை அம்மாநில காவல்துறையினர் கைது செய்ததால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

போலீசாரின் லத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க பயன்பட்டிருக்க வேண்டும் – பிரியங்கா ஆவேசம்

இந்நிலையில் ஹத்ராஸில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “ஹத்ராஸ் சம்பவத்தில் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் மரணத்துக்கு முதல்வர் ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொடர்ந்து போராடுவேன். உ.பி.யில் நாள்தோறும் 11 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யபப்டுகின்றன. ஆனால் அரசு இதுவரை எதுவுமே செய்யவில்லை. அகம்பாவம் பிடித்த அரசால் எங்களை தடுத்து நிறுத்த முடியாது. போலீசாரின் லத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க பயன்பட்டிருக்க வேண்டும்” எனக் ஆவேசாமாக கூறினார்.