போலீசாரிடம் பெண்ணின் போன் நம்பரை கேட்ட டிவிட்டர் ஆசாமி…ஒரே பதிலால் ஆட்டம் கண்டு போன நெட்டிசன்கள்!

 

போலீசாரிடம் பெண்ணின் போன் நம்பரை கேட்ட டிவிட்டர் ஆசாமி…ஒரே பதிலால் ஆட்டம் கண்டு போன நெட்டிசன்கள்!

அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை டேக்  செய்துள்ளார்.  உடனே போலீஸ் உள்பட பலரும்  தனோரி காவல்நிலையத்தின் எண்ணை அனுப்பியுள்ளனர்.

மகாராஷ்டிராவின் புனே பகுதியில் உள்ள  தனோரி எனும் இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில், புனே போலீசாரே எனக்கு தனோரி  காவல் நிலையத்தின் எண்  கிடைக்குமா என்று கேட்டு, புனே போலீசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை டேக்  செய்துள்ளார்.  

ttn

உடனே போலீஸ் உள்பட பலரும்  தனோரி காவல்நிலையத்தின் எண்ணை அனுப்பியுள்ளனர்.

அப்போது  டிவிட்டர் ஆசாமி  ஒருவர்  புனே போலீசாரை டேக்  செய்து, எனக்கு அந்த பெண்ணின் போன் நம்பர் கிடைக்குமா என்று கேட்டுள்ளார்.

அதை பார்த்து  பலரும் அதிர்ச்சியடைய புனே போலீசாரோ, ‘சார் அந்த பெண்ணின் போன் நம்பரை தெரிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருப்பதால், உங்களுடைய போன் நம்பரைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எங்களுக்கு வந்துவிட்டது. நீங்கள் எங்களுக்கு மெசேஜில் அனுப்புங்கள். உங்கள் ரகசியங்கள் மதிக்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளனர். இந்த குபீர் மொமெண்ட்டை கண்ட பலரும் புனே போலீசாரை பாராட்டி வருகின்றனர்.