போலி நிருபர்கள்… பத்திரிகைகள்… கிரிமினல் சங்கங்கள்: ஹைகோர்ட் கடிவாளம்

 

போலி நிருபர்கள்… பத்திரிகைகள்… கிரிமினல் சங்கங்கள்: ஹைகோர்ட் கடிவாளம்

சமீபகாலமாக சென்னையில் பிடிபடும் பல கிரிமினல் கும்பல்களிலும் ‘பிரஸ்’ என்று கார்டு வைத்திருக்கும் ஆட்கள் சிக்குவது வாடிக்கையாகி இருக்கிறது. சமீபத்தில் ஒரு நகைக்கடை உரிமையாளரை மிரட்டிப் பணம் பறித்த கூட்டத்திலும் ஒரு ‘ பத்திரிகையாளர்’ உண்டு. கடந்த இரண்டாண்டு காலத்தில் இப்படி 40 போலிப் பத்திரிகையாளர்கள் கைதாகி இருக்கிறார்கள்.

சமீபகாலமாக சென்னையில் பிடிபடும் பல கிரிமினல் கும்பல்களிலும் ‘பிரஸ்’ என்று கார்டு வைத்திருக்கும் ஆட்கள் சிக்குவது வாடிக்கையாகி இருக்கிறது. சமீபத்தில் ஒரு நகைக்கடை உரிமையாளரை மிரட்டிப் பணம் பறித்த கூட்டத்திலும் ஒரு ‘ பத்திரிகையாளர்’ உண்டு. கடந்த இரண்டாண்டு காலத்தில் இப்படி 40 போலிப் பத்திரிகையாளர்கள் கைதாகி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல இது போன்ற பத்திரிகையாளர்களுக்கு மட்டும் தனிச் சங்கங்களும் இயங்குகின்றன. இந்த போலிப் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல, பல போலிப் பத்திரிகைகள் இருப்பதும் அந்த போலிப் பத்திரிகையில் வேலைபார்க்கும் செய்தியாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அக்ரிடேஷன் எனப்படும் அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட அடையாள அட்டைகள் தமிழ்நாடு செய்திதுறை வழங்கி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது!

accreditation-card

தகவல் அறியும் சட்டப்படி தமிழக அரசின் செய்தித்துறை அப்படி அக்கிரிடேஷன் கார்டு கொடுத்து இருக்கும் பத்திரிகைகளின் பெயரும், அவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள கார்டுகளின் எண்ணிக்கையும்,

தினச்சூரியன் 4
புதிய நாளிதழ் 3
தமிழ் அஞ்சல் 4
புதுகை வரலாறு 2
பரபரப்பு செய்தி 3
ஊடகக் குரல் 7
மக்கள் கட்டளை 4
மக்களின் உரிமை குரல் 2
மக்கள் வெளிச்சம் 7
மக்கள் கருத்து 3
மாலைச் செய்தி 4
இன்றைய தமிழகம் 2
ஈவ்னிங் வாய்ஸ் 2
தினச்சங்கு 4
தினப் பறவை 3
தின ஓசை 3
அறப்பார்வை 3
தினக்கதிர் 4
மாலைத்தூது 4
உள்ளாட்சி முரசு 6
தலைமைச் செய்தி 7
தமிழக நியூஸ் 4
போர் புதிய முரசு 4
கதிர் மதி 1
ஜூனியர் குரல் 3
தினச்செய்தி 3
தின அஞ்சல் 2
தின சக்தி 3
தின மொழி 3
அம்மா அரசு பப்ளிகேஷன் 1
இந்தியா ஹெட் நியூஸ் 2
பவர் எக்ஸ்பிரஸ் 3
உள்ளாட்சி சாரல் 2
நமது மலர் 4
முதல் முரசு 3
மீடியா செய்தி 4
மாலை எக்ஸ்பிரஸ் 3
மக்கள் முகம் 3
மக்கள் கோட்டை 4
மாலை இதழ் 6
மாலை தீபம் 4
வெள்ளஇ இதழ் 3
வில் முரசு 3
விடியும் நேரம் 1
உலகத்தின் வெளிச்சம் 5
நமது முரசு 3
தினக்குரல் 5
பாரத அன்னை புரட்சி 6
அம்மா அரசு 2
ஈவ்னிங் தமிழ்நாடு 3
மதியம் டெய்லி 1

இந்தப் பட்டியலில் இருக்கும் பெரும்பாலான பத்திரிகைகள் ,அதன் நிருபர்கள் யாருக்கும் செய்தி சேகரிப்பது தொழிலல்ல! .விருதுகள் வழங்கியும், அரசு ஒப்பந்தங்கள் வாங்கிக் கொடுத்தும், பணியிடை மாற்றம் வாங்கிக் கொடுத்தும் சில்லறை சேர்ப்பதே தொழிலாக வைத்திருக்கிறார்களாம்..

சமீபத்தில் இந்த விவகாரத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் கையில் எடுத்திருக்கிறது. தமிழகத்தில் எத்தனை போலிப் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டு இருப்பதுடன் ,அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை வைத்துள்ளோரில் எத்தனை பேர்மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன என்றும் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறது. அத்துடன் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு செய்தித்துறை,சென்னை பத்திரிகையாளர் யூனியன், ரிப்போர்ட்டர்ஸ் கில்டு ஆகிய அமைப்புகழையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து இருக்கிறது. இந்த போலிகளைக் களைய நீதிமன்றம் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை உண்மையான உழைக்கும் பத்திரிகையாளர்கள் வரவேற்று இருக்கிறார்கள்.