போலி நகைகளுக்கு ரூ.8.5 லட்சம் கொடுத்த ஸ்டேட் பாங்க்! வாடிக்கையாளர் டிசைன் அப்படி!

 

போலி நகைகளுக்கு ரூ.8.5 லட்சம் கொடுத்த ஸ்டேட் பாங்க்! வாடிக்கையாளர் டிசைன் அப்படி!

புதுக்கோட்டை திருமயம் பகுதியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் நூதனமாக கொள்ளையடித்துள்ளது ஒரு கும்பல். இந்த வங்கிக் கிளையில் ஆரியமாலா  என்பவர் வாடிக்கையாளராக உள்ளார். வங்கியின் வாடிக்கையாளரான ஆரியமாலாவை மர்ம நபர்கள் அணுகி, தங்களுக்கு இந்த வங்கிக் கிளையில் கணக்கில்லை என்றும், அதனால் தங்களிடம் உள்ள தங்க நகைகளை உங்கள் பெயரில் வங்கியில் அடகு வைத்து தருமாறும் கேட்டுள்ளனர்.

புதுக்கோட்டை திருமயம் பகுதியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் நூதனமாக கொள்ளையடித்துள்ளது ஒரு கும்பல். இந்த வங்கிக் கிளையில் ஆரியமாலா  என்பவர் வாடிக்கையாளராக உள்ளார். வங்கியின் வாடிக்கையாளரான ஆரியமாலாவை மர்ம நபர்கள் அணுகி, தங்களுக்கு இந்த வங்கிக் கிளையில் கணக்கில்லை என்றும், அதனால் தங்களிடம் உள்ள தங்க நகைகளை உங்கள் பெயரில் வங்கியில் அடகு வைத்து தருமாறும் கேட்டுள்ளனர். ஆரியமாலாவும் இதற்கு சம்மதித்து, 330 கிராம் எடையுள்ள நகைகளை  8.5 லட்சம் ரூபாய்க்கு அந்த வங்கியில் அடகு வைத்து கொடுத்துள்ளார். 

fake gold

குறிப்பிட்ட தினத்தில் அந்த வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் நண்பகல் வரையில் விடுப்பில் இருந்துள்ளார். இதை அறிந்த மர்ம நபர்கள் அந்த நேரத்தைப் பயன்படுத்தி, நகைகளைக் கொடுத்து பணமும் பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர். பிற்பகல் பணிக்கு திரும்பிய நகை மதிப்பீட்டாளர், சந்தேகத்தின் பேரில் நகையை சோதனை செய்ததில் 330 கிராம் நகையும் போலியானது என்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து வங்கி மேலாளரிடம் தகவல் தெரிவித்தார். அதன் பின்னர், வங்கி மேலாளர் காவல்துறையில் புகாரளித்தார். வங்கியில் பதிவான கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். பணம் கொடுத்த காசாளரும், முன்பின் தெரியாதவருக்கு தனது பெயரில் நகையை அடகு வைத்துக் கொடுத்த ஆரியமாலாவும் தற்போது பணத்திற்கு பொறுப்பாகியுள்ளனர்.