போலி செய்திகளை நம்பாதீர்கள்! நான் லஞ்ச ஒழிப்பு அதிகாரிதான் – கெஞ்சும் மீராமிதுன்

போலி செய்திகளை நம்பாதீர்கள்! நான் லஞ்ச ஒழிப்பு அதிகாரிதான் – கெஞ்சும் மீராமிதுன்

சர்ச்சை நாயகி மீரா மிதுன் கடந்த மாதம் 12ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்தான் தமிழகத்திற்கான லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. ஐ எம் வாட்சிங் என பதிவிட்டிருந்தார்.

Meera

இந்த பதிவு பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. டெல்லியில் முறையாக தேர்வு எழுதிதான் வாங்கினேன் என விளக்கமளித்திருந்தார். அதுமட்டுமின்றி கடந்த மாதம் நடைபெற்றப் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மீரா மிதுன்,   டிசம்பர் மாதம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். 

மீரா மிதுன்

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியிலிருந்து இன்று முதல் மீராமிதுன் நீக்கப்படுவதாகவும், மோசடி வழக்குகள் உள்ளதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில் மீரா மிதுன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில்”நான் சொல்ற வரைக்கும் வதந்திகளையும், போலியாக வரும் செய்திகளையும் நம்ப வேண்டாம். இன்னும் நான் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியில் இருக்கிறேன்” என மீண்டும் அவருடைய அடையாள அட்டையுடன் பதிவிட்டுள்ளார்.