போலி செய்திகளை அறியும் வசதி இன்ஸ்டாவிலும் அறிமுகம்!

 

போலி செய்திகளை அறியும் வசதி இன்ஸ்டாவிலும் அறிமுகம்!

சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் அதிக அளவில் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதைக் கட்டுப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் வைரலாக பரவும் பதிவுகளை ஃபேக்ட் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம், ஃபேஸ்புக்கில் போலிச் செய்திகள் பகிர்வது குறையத் தொடங்கியது.

சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் அதிக அளவில் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதைக் கட்டுப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் வைரலாக பரவும் பதிவுகளை ஃபேக்ட் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம், ஃபேஸ்புக்கில் போலிச் செய்திகள் பகிர்வது குறையத் தொடங்கியது. ஆனால், மற்ற சமூக ஊடகங்களில் இதுபோன்ற வசதி இல்லை. இதனால் போலி செய்திகளை பரப்புகிறவர்களின் கவனம் மற்ற சமூக ஊடகங்களில் விழ ஆரம்பித்தன.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் போலி செய்திகள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, உண்மை கண்டறியும் வசதியை தற்போது இன்ஸ்டாகிராமிலும் வழங்கியுள்ளனர். பயனாளர்கள் தங்களுக்கு சந்தேகமான பதிவுகள் பற்றி இன்ஸ்டா நிறுவனத்துக்கு புகார் செய்யலாம். வைரலாக பகிரப்படும் பதிவுளை அவர்களாக தேர்வு செய்து அதை ஆய்வு செய்து உண்மை தன்மையை வெளியிடுவார்கள்.

insta-fake-news-detection

குறிப்பிட்ட பதிவு தவறானது, அல்லது பாதி உண்மை பாதி பொய் என்றால் அந்த பதிவின் மீது ஒரு மெல்லிய திரை போன்று தோன்றி  “See Why” என்ற தகவலைக் காட்டும். அதை கிளிக் செய்தால் இந்த பதிவில் என்ன தவறு என்பதை தெரிந்துகொள்ளலாம். மேலும், அந்த பதிவில் “See Post” என்று ஒரு ஆப்ஷனை அளித்திருப்பார்கள். அதை கிளிக் செய்வதன் மூலம் அந்த பதிவு என்ன என்று தெளிவாக காண முடியும். இதன் மூலம் இன்ஸ்டாகிராமிலும் போலி செய்திகள் பரவுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.