போலி ஆவணத்தில் நிலம் அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி ! நிலத்திற்கும் ஆதார் எண் வழங்க உள்ளது மத்திய அரசு !

போலி ஆவணத்தில் நிலம் அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி ! நிலத்திற்கும் ஆதார் எண் வழங்க உள்ளது மத்திய அரசு !

போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை விற்பதையும், ஒரே நிலத்தை பலருக்கு விற்பனை செய்யும் முறைகேட்டை தடுக்கவும் நிலங்களுக்கு பிரத்யேக எண் கொடுக்கப்பட்டு அது உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நிலத்துக்காக கொடுக்கப்படும் பிரத்யேக எண் மூலம் நிலம் அமைந்துள்ள  மாநிலம், மாவட்டம், கிராமம், உரிமையாளர் பெயர் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். நிலத்துக்கான பிரத்யேக எண்ணை உரிமையாளரின் ஆதார் எண்ணோடு இணைப்பதால் குறிப்பிட்ட நிலத்தின் முந்தைய உரிமையாளர்கள், வரி கட்டி விவரங்கள், நிலத்தின்மீது இருக்கிற கடன்கள் எல்லாம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இனி நில விற்பனையில் எந்த மோசடியும் செய்ய முடியாது. வீட்டுமனைகளுக்கும் இந்த மாதிரி அடையாள எண் கொடுகவும் திட்டமிட்டுள்ள மத்திய அரசு அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

House Plot

ஏற்கனேவ ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு, வருங்கால வைப்பு நிதிக்கணக்கு, வருமான வரிக் கணக்கு எண் அனைத்திலும் இணைத்துஇருப்பதால் ஒருவரின் ஆதார் எண் வைத்தே அவரோட எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

குறைந்த விலைக்கு கிடைக்குதே என கோயில் நிலைங்களையும், பட்டா இல்லாத நிலங்களையும், ஏற்கனவே வழக்கு நிலுவையில்  உள்ள நிலங்களையும் வாங்கும் நிலைமை இனி வராது. பிரச்சனைகள் உள்ள சொத்தை வாங்கிவிட்டோம் என நீதிமன்றத்திற்கும், காவல் நிலையத்திற்கும் அலைய வேண்டிய வேலை இனி இருக்காது. சொத்துக்ளை வாங்கிப்போட்டு விட்டு இனி யாராவது அபகரித்து விடுவார்களா என்ற பயம் தேவை இல்லை.