போலாரிஸ் ஸ்போர்ட்ஸ்மேன் 570 டிராக்டர் இந்தியாவில் அறிமுகம்

 

போலாரிஸ் ஸ்போர்ட்ஸ்மேன் 570 டிராக்டர் இந்தியாவில் அறிமுகம்

போலாரிஸ் ஸ்போர்ட்ஸ்மேன் 570 டிராக்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

டெல்லி: போலாரிஸ் ஸ்போர்ட்ஸ்மேன் 570 டிராக்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

போலாரிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. ஸ்போர்ட்ஸ்மேன் 570 என பெயரிடப்பட்டுள்ள இந்த டிராக்டரின் விலை ரூ.8.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக முதலில் ரூ.7.99 லட்சம் விலையில் விற்கப்படுகிறது. அத்துடன் இந்த வாகனம் தான் போலாரிஸ் நிறுவனத்தின் முதல் ரோடு வாகனமாகும்.

ttn

போலரிஸ் ஸ்போர்ட்ஸ்மேன் 570 டிராக்டரில் 34 பிஹெச்பி திறன், 567சிசி எஞ்சின், மின்னணு எரிபொருள் உட்செலுத்துதல் அமைப்பு மற்றும் 4WD அம்சங்களை கொண்டுள்ளது. இதன் நான்கு-ஸ்ட்ரோக் எஞ்சின் 810 கிலோ வரை இழுக்கும் திறன் கொண்டது. இந்த டிராக்டரில் வின்ச் மற்றும் கலப்பை மவுண்ட் தட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பான், பயிரிடுபவர் போன்றவற்றை செய்ய முடியும். இரு நபர்கள் அமரக்கூடிய வகையில் சீட்டிங் அமைப்பு முழு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

ttn

இதன் மூலம் பயனர்கள் எந்தவொரு வேலையையும் செய்யலாம் அல்லது கடினமான பாதையிலும் பயணிக்கலாம். டிராக்டரில் 28செ.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 24 செ.மீ  நீண்ட பின்புற சஸ்பென்ஷன் ஆகியவை ஓட்டுநரையும் பயணிகளையும் கடினமான நிலப்பரப்பில் கூட வசதியாக பயணிக்க வைக்கும். அடிப்பகுதியில் காற்றோட்டம் அதிகம் புகக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் குளிரான மற்றும் அமைதியான சவாரிக்கு உதவுகிறது. எனவே பயணிகள் எளிதில் நீண்ட நேரம் பயணம் செய்யலாம்.