போற போக்கை பார்த்தா கட்சியில நீங்களாவது இருப்பீங்களா? தனி மரமான சந்திரபாபு நாயுடு

 

போற போக்கை பார்த்தா கட்சியில நீங்களாவது இருப்பீங்களா? தனி மரமான சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் லங்கா தினகர் அந்த கட்சியிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைந்தார். முன்னணி தலைவர்கள் கட்சியை விட்டு ஓட்டம் பிடிப்பதால் சந்திரபாபு நாயுடு திகைத்து நிற்பதாக தகவல்.

ஆந்திராவின் ஹைடெக் முதல்வர் என்று பெயரெடுத்தவர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. கடந்த நாடாளுமன்ற மற்றம் சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் மத்தியில் ஆட்சி செய்து வந்த பாஜ. அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். குறிப்பாக பா.ஜ.வை ஒழிப்பதை என் முதல் வேலை என்று கூறி நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகளை சந்தித்து பேசி வந்தார்.

பா.ஜ.வில் இணைந்த லங்கா தினகர்
அவர் அப்படி நாடு முழுவதும் சுற்றி வந்ததுதான் மிச்சம். தேர்தல் முடிவுகள் அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தன. ஆந்திராவில் ஆட்சியை இழந்தார். மத்தியில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்தது. இந்த சோகத்தை தாங்க முடியாமல் இருந்த சந்திரபாபு நாயுடுக்கு அடுத்த அடி அவரது கட்சியில் இருந்தே வந்துது. தெலுங்குதேச ராஜ்யசபா எம்.பி.கள் 4 பேர் பா.ஜ.வில் இணைந்தனர். இது எல்லாம் அரசியலில் சகஜம் என்று சந்திரபாபு நாயுடு சமாளித்தார்.

சந்திரபாபு நாயுடு

 

இந்த நிலையில், தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் லங்கா தினகர் இன்று அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் செய்தி தொடர்பாளார் பதவிலிருந்து விலகி  பா.ஜ.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ. அலுவலகத்தில் அந்த கட்சியின் செயல் தலைவர் நட்டா முன்னிலையில் அவர் பா.ஜ.வில் இணைந்தார். கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லோரும் வேறு எதாவது கட்சியில் போய் சேர்ந்தாலும் நாயுடுக்கு ஒன்றும் தெரியாது. ஆனாலும் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி பா.ஜ.வில் போய் அடைக்கலம் ஆகுவது சந்திரபாபு நாயுடுக்கு பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்