போர் எல்லாம் வேண்டாம், பேச்சுவார்த்தை நடத்தலாம்…. பேக் அடித்த பாகிஸ்தான்…

 

போர் எல்லாம் வேண்டாம், பேச்சுவார்த்தை நடத்தலாம்…. பேக் அடித்த பாகிஸ்தான்…

காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண போர் எங்களது சாய்ஸ் இல்லை. இந்தியாவுடன் பேச நாங்கள் தயாராக உள்ளோம் என பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். குரேஷி தெரிவித்தார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு என்ற இந்திய அரசின் நடவடிக்கையால் பாகிஸ்தான் கலகலத்து போனது. மேலும், காஷ்மீருக்கு விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடான வர்த்தக உறவை முற்றிலுமாக துண்டித்தார். காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கும் முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டது. ஆனால் தோல்விதான் மிஞ்சியது.

இம்ரான் கான்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், காஷ்மீர் நிலவரம் இரு நாடுகளுக்கு இடையே போரை ஏற்படுத்தும் என இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் நேற்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம். குரேஷி இந்தியாவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என அப்படியே மாற்றி பேசி உள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் எஸ்.எம். குரேஷி பேட்டி ஒன்றில் கூறுகையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என பாகிஸ்தான் எப்போதும் சொல்லவில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலையை இந்தியா உருவாக்குவதை நாங்கள் பார்க்கவில்லை. காஷ்மீரை சட்டவிரோதமாக இணைத்தது மற்றும் ஊரடங்கு, தலைவர்களை அடைத்து வைத்து இருப்பது மற்றும் குவித்து இருக்கும் பாதுகாப்பு வீரர்களை இந்தியா திரும்ப பெற வேண்டும்.

காஷ்மீர் நிலவரம்

இந்தியா ஜம்மு அண்டு காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் அவர்களை எங்களுடன் பேச அனுமதிக்க வேண்டும். இதனை செய்தால் இந்தியாவுடன் நாங்கள் பேச தயாராக உள்ளோம். காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண போர் எங்களது விருப்பம் இல்லை என கூறினார்.