போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட சிறந்த 100 பிரபலங்கள் : பட்டியலில் இடம்பிடித்த ரஜினி, விஜய் மற்றும் அஜித்

 

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட சிறந்த 100 பிரபலங்கள் : பட்டியலில் இடம்பிடித்த ரஜினி, விஜய் மற்றும் அஜித்

சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி பிரபல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்களும் இடம்பெறுவார்கள்.

இந்தியாவில் உள்ள 100  பிரபலங்களின்  பட்டியலை  போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் பட்டியலை வெளியிட்டு வருகிறது.  

ttn

இதில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி பிரபல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்களும் இடம்பெறுவார்கள். அந்த வகையில் இந்தாண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. 

ttn

அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.  இரண்டாவது இடத்தை  அக்ஷய்குமார் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் பாலிவுட் நடிகர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ttn

குறிப்பாக இந்த பட்டியலில்  நடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தில் உள்ளார்.  விஜய்க்கு 47 வது இடமும்,  அஜித்துக்கு 52 ஆவது இடமும்  கிடைத்துள்ளது.  இதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.