போரை அறிவிக்க அதிபருக்கு அதிகாரம் கிடையாது அமெரிக்க பிரதிநிதிகள் சபை அதிரடி !

போரை அறிவிக்க அதிபருக்கு அதிகாரம் கிடையாது அமெரிக்க பிரதிநிதிகள் சபை அதிரடி !

ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கும் என்ற நிலையில், போரை பிரகடணம் செய்ய டிரம்புக்கு அதிகாரம் இல்லை என அமெரிக்க பிரதிநிதிகள் சபை தெரிவித்துள்ளது.

ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கும் என்ற நிலையில், போரை பிரகடணம் செய்ய டிரம்புக்கு அதிகாரம் இல்லை என அமெரிக்க பிரதிநிதிகள் சபை தெரிவித்துள்ளது.

us-senate

இந்த தீர்மானத்திற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 224 பேர் ஆதரவாகவும், , 194 பேர் தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தனர். குடியரசுக் கட்சியில் 3 பேர் எதிராக வாக்களித்தனர். செனட் சபையிலும் இந்த தீர்மானம் நிறைவேறிவிட்டால், அமெரிக்க காங்கிரஸ்  ஒப்புதல் இன்றி, போர் குறித்து டிரம்ப் முடிவெடுக்க முடியாது. 

qassem

ஈரானில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலாக ஈரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அதிகாரபூர்வ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடைபெற்றிருந்தாலும், தற்போதைய சூழலில் போர் நடத்தவேண்டம் என ஈரான் அதிகாரிகளே முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 
ஈரானின் முன்னாள் தளபதி சுலைமானியின் இறுதிச் சடங்கின்போது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதா இறுதிச்சடங்கில் இருந்த பலர் சந்தோஷத்துடன் ஆர்ப்பரித்துள்ளனர். 
ஆனால் அமெக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து தெரிவிக்கையில் அனைத்தும் நலனாகவே இருக்கிறது என தெரிவித்துள்ளார்.