போருக்கு ஆயுதமின்றி அனுப்புவது நியாயமா? மத்திய – மாநில அரசுகளுக்கு கமல் கேள்வி!

தமிழகம் மற்றும் இந்தியா முழுக்க கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு போதிய நோய்த் தடுப்பு கருவிகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பேட்டி அளிக்கும் அமைச்சர், செயலாளர் என்95 மாஸ்க் அணிந்திருக்கின்றனர். நோயாளிகளை சந்திக்கும் மருத்துவர்களோ சாதாரண மாஸ்க் அணிந்திருக்கின்றனர். இதனால், தொற்று மருத்துவர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் மற்றும் இந்தியா முழுக்க கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு போதிய நோய்த் தடுப்பு கருவிகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பேட்டி அளிக்கும் அமைச்சர், செயலாளர் என்95 மாஸ்க் அணிந்திருக்கின்றனர். நோயாளிகளை சந்திக்கும் மருத்துவர்களோ சாதாரண மாஸ்க் அணிந்திருக்கின்றனர். இதனால், தொற்று மருத்துவர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

doctors

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல ஹாசன் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.