போராட உங்களுக்கு உரிமை உள்ளது… ஆனால் உங்க உரிமைகள் மற்றவர்களை மிதிக்க கூடாது….. ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் மத்தியஸ்தர்கள் வலியுறுத்தல்….

 

போராட உங்களுக்கு உரிமை உள்ளது… ஆனால் உங்க உரிமைகள் மற்றவர்களை மிதிக்க கூடாது….. ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் மத்தியஸ்தர்கள் வலியுறுத்தல்….

போராட உங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் மற்றவர்களும் உரிமை உள்ளது. சாலைகளை பயன்படுத்த மற்றும் கடைகளை திறக்க போன்ற உரிமைகள் மற்றவர்களுக்கு உள்ளது. உங்களது உரிமைகள் மற்றவர்களை மிதிக்க கூடாது என ஷாஹீன பாக் போராட்டக்காரர்களிடம் மத்தியஸ்தர்கள் வலியுறுத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக்கோரி வழக்கறிஞர் அமித் ஷானி மற்றும் பா.ஜ.க. தலைவர் நந்த் கிஷோர்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள்  சஞ்சய் கிஷான் கவுல் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கி அமர்வு, சாலையில் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக வேறு இடத்தில் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் ஆலோசனை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாத்னா ராமசந்திரன்  ஆகியோர் அடங்கிய மத்தியஸ்த குழுவை நியமனம் செய்தது. மேலும் அவர்களுக்கு உதவி செய்வதற்காக முன்னாள் தகவல் ஆணையர் வாஜாஹத் ஹபிபுல்லாவிடம் பேசும்படியும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

மத்தியஸ்தர்கள் குழு

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சஹானா ராமசந்திரன் நேற்று மதியம் ஷாஹீன் பாக் பகுதிக்கு சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள் மத்தியில் மூத்த வழக்கறிஞர் சாத்னா ராமசந்திரன் கூறியதாவது: உங்களுக்கு போராடும் உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் உங்களை மாதிரி மற்றவர்களுக்கும் சாலைகளை பயன்படுத்த, கடைகளை திறப்பது போன்ற உரிமைகள் உள்ளது.

ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

நாங்கள் உங்கள் பேச்சை கேட்க விரும்புகிறோம். ஒன்றாக நாம் ஒரு தீர்வைக் காண்போம். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கும் ஒரு எடுத்துக்காட்டு என நான் நம்புகிறேன். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஒவ்வொருவரிடமும் பேசுவோம் என நாங்கள் நம்புகிறோம். இந்த பிரச்சினைக்கு ஒவ்வொருவரின் ஒத்துழைப்புடன் தீர்வு காண்போம்  என நாங்கள் நம்புகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் ஷாஹீன் பாக் தொடர்பான வழக்கு அடுத்து 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது.