போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

 

போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடி: அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட இருக்கிறது. மேலும் ஆலையை திறந்தால் போராட்டம் வெடிக்கும் என மக்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதால் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆலையை மூடுவதில் அரசு உறுதியாக இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் தீர்ப்பு தொடர்பாக, ஓரிரு வாரங்களில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.