போராட்டத்தை தூண்டிவிட வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இல்லை… திருநாவுக்கரசர் சொல்கிறார்!

போராட்டத்தை தூண்டிவிட வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இல்லை… திருநாவுக்கரசர் சொல்கிறார்!

எந்த ஒரு நாட்டிலிருந்தும் அகதியாக வருபவர்களிடமும் சாதி, மத, இன, மொழி பாகுபாட்டை புகுத்தக்கூடாது. மக்களைப் பிரித்தாளக்கூடிய வகையில் சட்டம் இருப்பதால் மக்கள் எதிர்க்கிறார்கள். இதை காங்கிரஸ் தூண்ட வேண்டிய அவசியமில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது இந்த பிரச்னைக்கு தீர்வு தந்துவிடாது. இது சர்வாதிகார நாடு இல்லை.
அரசு தவறு செய்யும்போது அதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யத்தான் செய்யும். அதை அரசு திருத்திக்கொள்ளாத போது நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட மக்களைத் தூண்டிவிட வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்ற திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்துள்ளார்.
சென்னையில் விமானநிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் எம்.பி, “பா.ஜ.க அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறுபான்மையினருக்கு எதிராக சட்டத்தைக் கொண்டுவந்துள்ளனர். தமிழகத்தில் மூன்று தலைமுறை கண்ட அகதிகள் உள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும். 

Protest against CAB

எந்த ஒரு நாட்டிலிருந்தும் அகதியாக வருபவர்களிடமும் சாதி, மத, இன, மொழி பாகுபாட்டை புகுத்தக்கூடாது. மக்களைப் பிரித்தாளக்கூடிய வகையில் சட்டம் இருப்பதால் மக்கள் எதிர்க்கிறார்கள். இதை காங்கிரஸ் தூண்ட வேண்டிய அவசியமில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது இந்த பிரச்னைக்கு தீர்வு தந்துவிடாது. இது சர்வாதிகார நாடு இல்லை.
அரசு தவறு செய்யும்போது அதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யத்தான் செய்யும். அதை அரசு திருத்திக்கொள்ளாத போது நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. 
உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம்தான் தடைவிதித்தது. தமிழக அரசு பக்கம் தவறு இருப்பதால்தான் ஒன்பது மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க, காங்கிரஸ் என கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. வழக்கு தொடர்ந்தது தள்ளிப்போடும் முயற்சி இல்லை” என்றார்.