போராட்டத்தில் குதிக்கும் மனநிலையில் மருத்துவர்கள்! – கைவிட அமித்ஷா கோரிக்கை

போராட்டத்தில் குதிக்கும் மனநிலையில் மருத்துவர்கள்! – கைவிட அமித்ஷா கோரிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பொது மக்கள் மத்தியில் மதிப்பு இருந்தாலும் அச்சமும் உள்ளது. இதனால், அவர்கள் வாடகை வீட்டிலிருந்தால் காலி செய்யச் சொல்வது, பரிசோதனைக்கு சென்றால் கல்லால் அடித்துத் தாக்குவது, மரணம் அடைந்தால் அவர்கள் உடலைக் கூட அடக்கம் செய்ய அனுமதிக்க மறுப்பது என்று பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவற்றைக் கைவிடும்படி அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பொது மக்கள் மத்தியில் மதிப்பு இருந்தாலும் அச்சமும் உள்ளது. இதனால், அவர்கள் வாடகை வீட்டிலிருந்தால் காலி செய்யச் சொல்வது, பரிசோதனைக்கு சென்றால் கல்லால் அடித்துத் தாக்குவது, மரணம் அடைந்தால் அவர்கள் உடலைக் கூட அடக்கம் செய்ய அனுமதிக்க மறுப்பது என்று பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

umar-farooq-89

பொது மக்களின் இத்தகைய செயல்கள் மருத்துவர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்துகிறது. அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவ சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட அடையாள போராட்டங்களை மருத்துவர்கள் நடத்தி வருகின்றனர்.

doctors

இந்த நிலையில் இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மருத்துவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, “உரிய பாதுகாப்பு ஏற்படுத்தப்படும், பாதுகாப்பு உறுதி செய்யப்படும். எனவே, மருத்துவர்கள் தங்கள் அடையாள போராட்டங்களைக் கைவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.