போராட்டக்காரர்கள் இருவர் பலி – நாடு முழுவதும் இதே வேலையாக திரியும் வேதாந்தா நிறுவனம்

 

போராட்டக்காரர்கள் இருவர் பலி – நாடு முழுவதும் இதே வேலையாக திரியும் வேதாந்தா நிறுவனம்

ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலை 250 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலை 250 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

பொதுமக்கள் போராட்டம் 

மற்றொரு தரப்பினர் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி பிரதான வாயிலில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை ஓஐஎஸ்எப் போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் கட்டுப்பாடுகளை மீறி ஆலைக்குள் நுழைந்தனர்.

vedhandha

அவர்களை போலீஸார் தடுத்த போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் லான்ஜிகர், விஸ்வானந்தபூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் லான்ஜிகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆலைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனம் 

மேலும், ஒடிசாவின் நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க இதே வேதாந்தா குழுமம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்தும் அந்தப் பகுதி பழங்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

vedhandha

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு தீராத தலைவலியை உருவாக்கி இருப்பதும் இதே வேதாந்தா குழுமம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் வேதாந்தா குழுமத்தின் ஆலைகள் சுற்றுச்சூழலை நாசம் செய்து பெரும் சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.