போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹாங்காங் அரசு முடிவு!!

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹாங்காங் அரசு முடிவு!!

கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களை சீனாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது.

ஹாங்காங் நாட்டில் கிரிமினல் குற்றங்கள் செய்து கைதாகியுள்ள குற்றவாளிகளை சீனாவிற்கு நாடு கடத்தி அங்கு விசாரணை நடத்தி தண்டனை வழங்குவதற்கு ஏதுவாக கைதிகள் பரிமாற்ற மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் பல லட்சக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Hong Kong protests

குறிப்பாக தலைநகரில் உள்ள முக்கிய பூங்கா ஒன்றில் 15 லட்சத்திற்கும் மேலானவர்கள் திரண்டு போராட்டத்தில் அமர்ந்தனர். இதனால் ஒட்டுமொத்த நாடே ஸ்தம்பித்து. இதை கட்டுப்படுத்த சீன அரசு தனது ராணுவத்தை ஹாங்காங் நாட்டில் இறக்கியது. 

சீன அரசு வன்முறையில் இறங்கினால் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளுக்கு நாள் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதால் அதை கட்டுப்படுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட அரசு தற்போது முயற்சிகள் செய்து வருகிறது. 

இந்நிலையில் ஹாங்காங் அரசின் நிர்வாக தலைவர் கேரி லேம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், அரசுத் தரப்பிலிருந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம். அரசியலுக்கு அப்பாற்பட்ட பேச்சுவார்த்தையே நடைபெறும். அமைதியை நிலைநாட்ட ஹாங்காங் அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

மேலும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனை அளிக்கப்பட இருக்கிறதே அதற்கு காவல் துறை முழு ஒத்துழைப்பை கொடுக்கவும் தயாராக இருக்கிறது என அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.