போராடும் இடத்தை மாற்ற…….ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்த குழு….உச்ச நீதிமன்றம் உத்தரவு…

 

போராடும் இடத்தை மாற்ற…….ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்த குழு….உச்ச நீதிமன்றம் உத்தரவு…

சாலையில் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக வேறு இடத்தில் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் ஆலோசனை நடத்த மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக்கோரி வழக்கறிஞர் அமித் ஷானி மற்றும் பா.ஜ.க. தலைவர் நந்த் கிஷோர்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள்  சஞ்சய் கிஷான் கவுல் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கி அமர்வு நேற்று விசாரித்தது.

ஷாஹீன் பாக் போராட்டம்

அப்போது, ஆர்பாட்டங்களை ஏற்பாடு செய்வது ஜனநாயகத்துக்கு நல்லது மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் மக்களுக்கு போராட உரிமை இல்லை என்று நாங்கள் கூறவில்லை.  கூடுவது மற்றும் போராடுவது  மக்களின் அடிப்படை உரிமை. ஆனால் எங்கு போராடுவது என்பதுதான் கேள்வி. நாளை மற்றொரு சட்டம் நிறைவேற்றப்படலாம் உடனே மக்கள் போராட்டத்தில் சாலைகளை மறிக்க தொடங்கினால் என்ன நடக்கும்?

ஷாஹீன் பாக் போராட்டம்

ஒவ்வொருவரும் சாலைகளை மறிக்க தொடங்கினால் என்ன நடக்கும்?. மக்களை சாலைகளை மறிக்க தொடங்கினால் என்ன நடக்கும் என்பதுதான் எங்கள் கவலை. இது குழப்பத்தை ஏற்படுத்தும். பொது சாலைகளை தடுப்பதே எங்களுக்கு தொந்தரவாக உள்ளது. போராட்டக்காரர்களை சமாதானம் செய்து அவர்கள் போராடும் இடத்தை மாற்றுவதும், போக்குவரத்துக்கு பாதையை சரிசெய்வதுமே இந்த பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும். ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் போராடும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக அவர்களிடம், மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சஹானா ராமசந்திரன் மற்றும் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபீபுல்லா ஆகியோர் ஆலோசனை நடத்துமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.