போன வருஷம் விட்டதை, இந்த வருஷம் பிடித்த இந்தியா சிமெண்ட்ஸ்

 

போன வருஷம் விட்டதை, இந்த வருஷம் பிடித்த இந்தியா சிமெண்ட்ஸ்

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.5.07 கோடி ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து இருந்தது.

சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.5.07 கோடி ஈட்டியுள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் ரூ.5.03 கோடியை நிகர இழப்பாக சந்தித்து இருந்தது.

சிமெண்ட்

2019 செப்டம்பர் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 11.20 சதவீதம் குறைந்து ரூ.1,269.40 கோடியாக குறைந்தது. 2018 செப்டம்பர் காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.1,429.57 கோடியாக இருந்தது. கடந்த காலாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாய் சரிவு கண்ட போதிலும், அந்நிறுவனத்தின் செலவினம் குறைந்தது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு சாதகமான அம்சமாகும்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவர் என்.ஸ்ரீனிவாசன்

கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மொத்தம் ரூ.1,271.02 கோடி மட்டுமே செலவு செய்தது. 2018 செப்டம்பர் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மொத்தம் ரூ.1,439.27 கோடி செலவு செய்து இருந்தது.