போன வருஷம் ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனை….. டாடா மோட்டார்ஸ் தகவல்

 

போன வருஷம் ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனை….. டாடா மோட்டார்ஸ் தகவல்

2019ம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ கார் மாடலில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனை செய்த தகவல் அந்நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது டாடா மோட்டார்ஸ். டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா குறைந்த விலையில் கார் வெளியிட வேண்டும் என மிகவும் ஆர்வமாக இருந்தார். அதன் விளைவாக 2008 ஜனவரியில் டாடா மோட்டார்சின் நானோ கார் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே அறிமுகம் ஆனது. ரத்தன் டாடா நானோ காரை மக்களின் கார் என்று அழைத்தார்.

ரத்தன் டாடா

அறிமுகம் ஆன நேரத்தில் டாடா  நானோ காருக்கு பெரிய அளவில் டிமாண்ட் இருந்தது. ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விட்டது நானோ கார். கடந்த சில ஆண்டுகளாக நானோ காரின் விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. கடந்த ஆண்டில் ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனை செய்துள்ள தகவல் தற்போது கிடைத்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், 2019ம் ஆண்டில்  பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரே ஒரு நானோ கார் விற்பனையாகியுள்ளது. மற்ற மாதங்களில் நானோ கார் விற்பனை நடைபெறவில்லை. மேலும் அந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் ஒரு நானோ கார் கூட தயாரிக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.