போதை மறுவாழ்வு மையத்தில் நடக்கும் மர்ம மரணங்கள்: சங்கிலியால் கட்டி வைத்து அடிப்பதாகப் புகார்!?

 

போதை மறுவாழ்வு மையத்தில் நடக்கும் மர்ம மரணங்கள்: சங்கிலியால் கட்டி வைத்து அடிப்பதாகப் புகார்!?

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தலைமைக் காவலர் அடித்தே கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி:  தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தலைமைக் காவலர் அடித்தே கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதைக்கு அடிமையானவர்களுக்கான  மறுவாழ்வு மையம் ஒன்று திருச்சியில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 25 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் இங்குச் சிகிச்சை பெற்று வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக்காவலர் தமிழ்ச்செல்வன் என்பவர் கடந்த 1 ஆம் தேதி உயிரிழந்தார். 

trichy

இதையடுத்து இங்கு நோயாளிகள் அடித்துக் கொல்லப்படுவதாகத் தமிழ்ச்செல்வனின் உறவினர்கள் குற்றச்சாட்டினர். மேலும் நோயாளிகளின் கை, கால்களை கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்துவதாகவும் இவர்கள் திருச்சி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

trichy

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  மறுவாழ்வு மையத்தில் சோதனை நடத்தினர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த நோயாளிகளை மீட்ட அவர்கள் அவர்களை முதலுதவிக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது நோயாளிகள் சிலர் அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  முன்னதாக இங்குக் கண்ணன் என்ற நோயாளியும் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு  குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.