“போதை பார்சல் சர்வீஸ்”-போஸ்ட் ஆபிசிலேயே போதை மாத்திரை கடத்தல் -தபால் ஊழியர்களின் தில்லாலங்கடி ….

“போதை பார்சல் சர்வீஸ்”-போஸ்ட் ஆபிசிலேயே போதை மாத்திரை கடத்தல் -தபால் ஊழியர்களின் தில்லாலங்கடி ….

பெங்களூருவில் சாம்ராஜ்பேட் போஸ்ட் ஆபிசில் ஊழியர்கள் சிலபேர் போதை மாத்திரை கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூருவில் சாம்ராஜ்பேட் போஸ்ட் ஆபிசில் ஊழியர்கள் சிலபேர் போதை மாத்திரை கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சாம்ராஜ்பேட் அஞ்சலகத்தில் ரமேஷ்குமார் (47),சுபா (34),சயீத் மஜித் (54),விஜயராஜன் (58)ஆகியோர் பணிபுரிந்து வந்தனர் ,இதில் ரமேஷ் போஸ்டல் உதவியாளர்  ,மற்றவர்கள் MTS staff.இவர்கள் நால்வரும் உள்ளூர் போதை கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு நெதர்லாந்து ,கனடா ,அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து MDMA  tablet ,பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்கள்  வரும் பார்சலை ஸ்கேன் பண்ணாமல் ,பிரிக்காமல் அதை உரிய போதை கடத்தல் கும்பலிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை செய்து பல லட்சங்கள் அதற்கு கூலியாக பெற்றது மேலதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிந்து அவர்களை கைது செய்தனர் .,மேலும் அவர்களிடமிருந்தும் பல லட்சங்கள் பெறுமான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன  என போலீசார் தெரிவித்தனர் .